ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் இன்று - News View

Breaking

Post Top Ad

Sunday, January 24, 2021

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் இன்று

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று கூடுகின்றது. 

எதுல்கோட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் காலை 10 மணிக்கு கூடும் இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் மேற்கொள்ள இருப்பதாக கட்சியின் அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் 110 பேருக்கான அனுமதியை செயற்குழுவில் பெற்றுக் கொள்ள இருப்பதுடன் கட்சியின் ஏனைய பதவிகளுக்கு புதிய அதிகாரிகள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கின்றது.

அத்துடன் மேலும் பல விடயங்கள் தொடர்பாகவும் அவதானம் செலுத்த இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கட்சியின் கீழ் மட்டத்திலான அமைப்புகளை கட்டியெழுப்புதல் மற்றும் கட்சியின் உறுப்புரிமையை பெறுவது தொடர்பில் செயற்குழுவின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டி இருக்கின்றது. 

அதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் கட்டியெழுப்பப்படும் புதிய அரசியல் கூட்டணி தாெடர்பில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்ல குழுவொன்றை அமைப்பது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட இருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

Post Bottom Ad