சிம்பாப்வேயில் அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளும் நிறுத்தி வைப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, January 7, 2021

சிம்பாப்வேயில் அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளும் நிறுத்தி வைப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிம்பாப்வே நாட்டில் அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2வது வாரத்தில் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. பிறகு ஜூன் மாதத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன.

தற்போது இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தென் ஆபிரிக்காவில் இருந்து வந்ததாக இங்கிலாந்து கூறுகிறது.

தற்போது ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான சிம்பாப்வேயில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதனால் தற்போது மீண்டும் ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad