போர்க் குற்றச்சாட்டுள்ள இராணுவ அதிகாரிகளை வெள்ளையடிப்பதற்கு இலங்கை கொரோனாவை பயன்படுத்துகின்றது - முஸ்லீம்களின் உரிமைகளை மீறுவதற்கும் ஏற்ற ஒரு மறைப்பாக வைரஸ் மாறியிருக்கின்றது : சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் - News View

About Us

About Us

Breaking

Friday, January 8, 2021

போர்க் குற்றச்சாட்டுள்ள இராணுவ அதிகாரிகளை வெள்ளையடிப்பதற்கு இலங்கை கொரோனாவை பயன்படுத்துகின்றது - முஸ்லீம்களின் உரிமைகளை மீறுவதற்கும் ஏற்ற ஒரு மறைப்பாக வைரஸ் மாறியிருக்கின்றது : சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம்

போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு முகங்கொடுக்கும் இராணுவ அதிகாரிகளை வெள்ளையடிப்பதற்கு இலங்கையானது கொரோனா வைரஸ் பரவலைப் பயன்படுத்துகின்றது என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பானர் ஜஸ்மின் சூக்கா இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா.வினால் பெயரிடப்பட்ட மற்றும் பாரிய மனித உரிமைகள் மீறல்களுக்காக அமெரிக்க அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு ஜெனரல் கொரோனாவை தடுப்பதற்கான நாட்டினுடைய தேசிய நடவடிக்கைகள் மையத்திற்கு பொறுப்பாக உள்ளார் என்பது மட்டுமல்ல கடந்த வாரம் வரை 2009 இல் இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் சண்டை அனுபவத்தை கொண்டவர்களை அநேகமாக கொண்ட இருபத்தைந்து அதிகாரிகள் நாடு முழுவதும் பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பொறுப்பாக போடப்பட்டுள்ளார்கள்.

முன்னர் வேண்டுமென்றே குண்டுத் தாக்குதல்கள் மற்றும் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்ட, வைத்தியசாலைகள் மீது தாக்குதல் மேற்கொண்ட, மக்களைப் பட்டினிபோட்ட, உயிர்க்காக்கும் மருந்துகளை மறுத்த அதே இலங்கை இராணுவ அதிகாரிகள் தற்போது மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவர்களது நியமனமானது கொரோனா அவரசரகால நிலையைப் பயன்படுத்தி கறைபடிந்த அமைப்பினை சுத்தம் செய்யும் ஒரு இழிவான முயற்சியாகும். அத்துடன் இதற்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கும் இது ஒரு பாரதூரமான பிரச்சினையை ஏற்படுத்துகின்றது.

இராஜதந்திரிகளும் நன்கொடை வழங்கும் நாடுகளும் சிவில் நிர்வாகம் அகற்றப்பட்டு வலுவற்றதாகச் செய்யப்படும் இந்தச் செயற்பாட்டிற்கு துணைபோகக் கூடாது. கொரோனா நிலைமையைக் கையாள்வதற்கு மாவட்ட இராணுவ இணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 25 இராணுவ அதிகாரிகளில் குறைந்தது 16 பேர் 2008-2009 சிவில் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற சண்டைகளில் தொடர்புபட்டிருந்தார்கள்.

ஐ.நா அமைதிகாப்பு படை நடவடிக்கைகளில் இருந்தும் தடுக்கும் அதேவேளையில் நகைமுரணாக இந்த அதிகாரிகள் தாம் போரில் தோற்கடித்தவர்களை தாம் அடக்கியாளும் பிரதேசங்கள் உட்பட பொதுமக்களின் சுகாதாரத்தை மேற்பார்வை செய்பவர்களாக இருக்கின்றார்கள்.

2009 இல் வேண்டுமென்றே பொதுமக்கள் இலக்குகளை இலக்கு வைத்தல், கூட்டாகப் படுகொலை செய்தல், வலிந்து காணாமல் போதல்கள், பாலியல் வன்புணர்வு மற்றும் சித்திரவதைகளில் தொடர்புபட்டிருந்தமையையும் அத்துடன் தேவையான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உயிர் தப்புவதற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விநியோகங்கள் போர் வலயத்திலுள்ள தமிழ் பொதுமக்களை சென்றடைவதினை வேண்டுமென்றே மறுத்தல் மற்றும் தடுத்தல் போன்றவற்றிலும் இராணுவம் கருவியாக இருந்துள்ளது என்பதை காட்டும் நியாயமான ஆதாரங்கள் உள்ளன.

போரில் பொதுமக்களின் உயிர்கள் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சர்வதேச சட்டங்களை மீறியிருக்கும் இந்த இராணுவத்தினரில் சிலர் தற்போது நாட்டினுடைய சுகாதாரத்திற்குப் பொறுப்பாக உள்ளனர் என்பது முடிவான அவமதிப்பாகும்.

சிவில் நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இராணுவ கட்டளையதிகாரிகளை நாடு முழுவதும் போடுதல் தற்போது இருக்கும் அரசாங்க அதிகாரிகளின் அதிகாரத்தினை இரத்துச் செய்வதாக உள்ளது. 

சுகாதாரம் தொடர்பான அவசரநிலை ஒரு போதும் ஜனநாயகத்தை அழிப்பதை நியாயப்படுத்தாது ஊழலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் பல முக்கிய அதிகாரிகள் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தினுள் கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்காக வடிவமைக்கப்பட்ட சர்வதேச உதவியில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பிலான பாரதூரமான கேள்விகள் உள்ளன.

மிகவும் இராணுமயப்படுத்தப்பட்ட அரசாங்கமானது தனது அதிகாரத்தினை நிலைநிறுத்துவதற்கும், இறந்தவர்களைப் புதைப்பதற்கான தமது உரிமை சட்ட ரீதியற்ற முறையில் மறுக்கப்பட்ட முஸ்லீம்கள் போன்ற சிறுபான்மையினரின் உரிமைகளை மீறுவதற்கும் ஏற்ற ஒரு மறைப்பாக கொரோனா வைரஸ் மாறியிருக்கின்றது” என சூக்கா தெரிவித்தார்.

“சுகாதாரப் பராமரிப்பு பற்றிய நிபுணத்துவம் அரிதாக இருந்தும் அதனை வழங்குதல் என்ற போர்வையின் கீழ் இலங்கை இராணுவம் சிவில் நிர்வாகப் பொறுப்பினை மெதுவாக அபகரித்துக் கொண்டுள்ளது இது நீண்ட காலப் பாதிப்பினை ஏற்படுத்தும் என்றார்.

No comments:

Post a Comment