மாகாண சபை தேர்தலில் சுதந்திர கட்சி தனித்து போட்டியிட்டால் பொதுஜன பெரமுனவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது - அமைச்சர் திலும் அமுனுகம - News View

About Us

About Us

Breaking

Saturday, January 2, 2021

மாகாண சபை தேர்தலில் சுதந்திர கட்சி தனித்து போட்டியிட்டால் பொதுஜன பெரமுனவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது - அமைச்சர் திலும் அமுனுகம

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபை தேர்தலில் சுதந்திர கட்சி தனித்து போட்டியிட்டால் பொதுஜன பெரமுனவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு சுதந்திர கட்சி மாத்திரம் பங்குதாரரல்ல. அரசியல் மட்டத்தில் கடந்த காலத்தை சுதந்திர கட்சி மீட்டிப்பார்க்க வேண்டும் என போக்கு வரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தில் குறிப்பிடப்பட்ட பல திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் பல அபிவிருத்தி பணிகள் கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வருடத்துக்குள் பல அபிவிருத்தி பணிகள் நிறைவு செய்யப்படும்.

அரசாங்கம் சுதந்திர கட்சிக்கு அநீதி இழைத்துள்ளது என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பொதுஜன பெரமுனவில் கூட்டணி அமைத்த அனைத்து கட்சிகளும் சமமான உரிமை வழங்கப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தலில் சுதந்திர கட்சி தனித்து போட்டியிட்டால் பொதுஜன பெரமுனவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெற்றுக் கொண்ட மக்களாணையை சுதந்திர கட்சி மறக்க முடியாது. கடந்த கால அரசியல் நிலவரங்களை சுதந்திர கட்சி மீட்டிப்பார்க்க வேண்டும்.

பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு சுதந்திர கட்சி மாத்திரம் பங்குதாரரல்ல ஏனைய கட்சிகளை போலவே சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்துள்ளது. பெரும்பான்மை பலம் பொதுஜன பெரமுன வசமே உள்ளது.

மாகாண சபை தேர்தல் குறித்து இரு வேறுப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் அவசியம் என்றால் மாகாண சபை தேர்தலை தொடர்ந்து பிற்போட முடியாது. ஆகவே மாகாண சபை தேர்தல் குறித்து அரசாங்கம் விரைவில் ஒரு உறுதியான தீர்மானத்தை அறிவிக்கும் என்றார்.

No comments:

Post a Comment