மட்டக்களப்பிலுள்ள வாவியொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, January 30, 2021

மட்டக்களப்பிலுள்ள வாவியொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கண்ணகி அம்மன் ஆலய வீதியிலுள்ள வாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (31) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவல் ஒன்றுக்கமைய பொலிசாரால் இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு நிருபர் சரவணன்

No comments:

Post a Comment