எவருக்கும் மன்னிப்பு கிடையாது, ஜனாதிபதி தலையீடு செய்யவும் மாட்டார் - நீதி அமைச்சர் அலி சப்ரி - News View

Breaking

Post Top Ad

Thursday, January 7, 2021

எவருக்கும் மன்னிப்பு கிடையாது, ஜனாதிபதி தலையீடு செய்யவும் மாட்டார் - நீதி அமைச்சர் அலி சப்ரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய எவரையும் ஜனாதிபதி மன்னிக்கமாட்டார் என்பதுடன், அந்த விடயத்தில் தலையீடுகளையும் மேற்கொள்ளமாட்டார்.

தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் கட்டாயம் பொறுப்புக்கூறியே ஆக வேண்டும். ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியானதும் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அதன் அடி முடிகள் அனைவருக்கும் தெரியவருமென நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் முற்பகல் 10 மணிக்குக் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, மனுக்கல் சமர்ப்பணத்தை தொடர்ந்து வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவால், உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

சம்ஷ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad