இந்தோனேசியா விமான விபத்து - பயணிகளின் உடல் பாகங்கள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, January 9, 2021

இந்தோனேசியா விமான விபத்து - பயணிகளின் உடல் பாகங்கள் மீட்பு

இந்தோனேசிய விமானம் விபத்துக்குள்ளான கடல் பகுதியில் இருந்து மனித உடல்களின் பாகங்கள் மற்றும் விமான பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து நேற்று 62 பேருடன் புறப்பட்டுச் சென்ற போயிங் விமானம் சிறிது நேரத்தில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து விமானம் விழுந்த ஜாவா கடல் பகுதியில் மீட்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது. 

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு கடற்படையை சேர்ந்த முக்குளிப்பு வீரர்களுடன் 10 க்கும் மேற்பட்ட கப்பல்களும் அனுப்பப்பட்டுள்ளன.

நேற்று நடந்த மீட்பு பணியின்போது விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த பாகங்கள் காணாமல் போன விமானத்தின் பாகங்கள்தானா? என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

நேற்று நள்ளிரவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேடுதல் பணி, தற்போது இன்று (ஞாற்றுக்கிழமை) அதிகாலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஜாவா கடற்பகுதியில் தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில், இன்று மனித உடல்களின் பாகங்கள் மற்றும் உடைகளை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். 

எனவே, விமானம் ஜாவா கடற்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. விமனத்தில் பயணித்த பயணிகளில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.

விபத்துக்குள்ளானதாக கருதப்படும் இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் அல்ல என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

கடந்த 2019ஆம் ஆண்டு ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த மாதம் வரை பாதுகாப்பு காரணங்களுக்கான இந்த ரக விமானங்களின் பயன்பாடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment