பாதாள குழு உறுப்பினரான 'பொடி லெசியின்' சகா துப்பாக்கியுடன் கைது - News View

Breaking

Post Top Ad

Saturday, January 23, 2021

பாதாள குழு உறுப்பினரான 'பொடி லெசியின்' சகா துப்பாக்கியுடன் கைது

(செ.தேன்மொழி)

பாதாள குழு உறுப்பினரான 'பொடி லெசியின்' சகா ஒருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிட்டியாகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹரன்னாகல பகுதியில் நேற்று பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹரன்னாகல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து வெளிநாட்டு தன்னியக்க துப்பாக்கி ஒன்றும், அதன் தோட்டாக்கள் இரண்டும், உள்நாட்டு துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் பாதாள குழு உறுப்பினரான 'பொடி லெசியின்' சகா என்றும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. மிட்டியாகொட பொலிஸார் சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad