கெப் வாகனம் - முச்சக்கர வண்டி மோதி விபத்து, ஒருவர் பலி - News View

Breaking

Post Top Ad

Saturday, January 2, 2021

கெப் வாகனம் - முச்சக்கர வண்டி மோதி விபத்து, ஒருவர் பலி

திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதி துவரங்காடு சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ் விபத்து நேற்றிரவு 8.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து ஹொரவ்பொத்தானை நோக்கிப் பயணித்த கெப் வாகனமும், மொரவெவ பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இவ்விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளதாகவும், அவர் திருகோணமலை சங்கமம் பகுதியைச் சேர்ந்த துறைமுக அதிகார சபையில் கடமையாற்றி வந்த அப்துல் ரஹீம் அப்துல் கலாம் (60 வயது) என்பவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்த முச்சக்கர வண்டி சாரதியின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கெப் வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ளதாகவும், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad