'நாங்கள் நான்காம் கட்ட விண்ணப்பதாரர்களாகத்தான் இருக்கிறோம்' : ராஜித சேனாரத்ன - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 6, 2021

'நாங்கள் நான்காம் கட்ட விண்ணப்பதாரர்களாகத்தான் இருக்கிறோம்' : ராஜித சேனாரத்ன

உலகில் பல நாடுகள் தடுப்பூசியைப் பயன்படுத்துகையில், நம் அரசாங்கம் இன்னும் தடுப்பூசியைத் தேர்ந்தெடுத்து வருகிறது. உறுதியான நிலைப்பாடுகள் இன்னும் இல்லை. நாட்டின் கொரோனா நிலை தொடர்ந்து ஆபத்தில் உள்ளது. இதற்கு ஏன் அறிவியல் முறைகளை அரசாங்கம் பின்பற்றவில்லை? நாங்கள் நான்காம் கட்ட விண்ணப்பதாரர்களாகத்தான் இருக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இன்று (06.01.2021) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, கொரோனா மற்றும் பொருளாதாரம் விடயங்கள் குறித்து இதன்போது கருத்துக்களை முன்வைத்தார்.

நாங்கள் கடைசியாகத்தான் விண்ணப்பித்துள்ளோம். உலகில் பல நாடுகள் ஏலவே விண்ணப்பித்து விட்டன. கனடா நாட்டு ஒவ்வொரு பிரஜைகளுக்குமாக 10 தடுப்பூசிகள் வீதம் கொள்வனவு செய்ய அந்நாடு விண்ணப்பித்துள்ளன. 

பல நாடுகள் முன்பே விண்னப்பித்துள்ளன. ஆனால் இலங்கை அரசாங்கம் தடுப்பூசிக்குப் பதிலாக நேரத்திற்கு ஒரு பானங்களைத்தான் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது.

எதிர்க்கட்சி இதை அரசாங்கத்திற்கு வலியுறுத்தி மூன்று மாதங்கள் ஆகின்றன. இன்று (06.01.2021) தான் 2022 ஆம் ஆண்டில் இந்த தடுப்பூசி நாட்டில் கிடைக்கும் என்று அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டது என ராஜித சேனரத்ன தெரிவித்தார்.

மேலும், இன்று, அரச குடும்பம் விரும்புவது போல் நாட்டில் எல்லாம் சட்டவிரோதமாக நடக்கிறது. இன்று மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தனக்குத் தெரியும் என்றும் இந்த அரசாங்கம் பணத்தை மோசடி செய்து உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளுடன் வணிக நட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்ன தெரிவித்தார்.

No comments:

Post a Comment