கொழும்பு துறைமுகத்தின் இரண்டு பிரதான முனையங்களை அரசாங்கம் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் தாரைவார்த்து விடும் - ஜே.வி.பி - News View

About Us

About Us

Breaking

Monday, January 4, 2021

கொழும்பு துறைமுகத்தின் இரண்டு பிரதான முனையங்களை அரசாங்கம் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் தாரைவார்த்து விடும் - ஜே.வி.பி

(இராஜதுரை ஹஷான்)

இந்தியாவுக்கு அடிபணிந்து அரசாங்கம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்க தீர்மானித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் இரண்டு பிரதான முனையங்களை அரசாங்கம் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் 5 வருட காலத்துக்குள் தாரைவார்த்து விடும் என மக்கள் விடுதலை முன்னணியின் ஊடக பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் அமைச்சரவை யோசனையை கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ளார்.

அமைச்சரவை யோசனையில் எவ்விதமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதை பொறுப்பான அமைச்சர் கூட அறிந்திருக்கமாட்டார்.

அமைச்சரவை யோசனையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை அரசாங்கத்தினால் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த முடியுமா என்ற சவாலை முன்வைக்கிறோம்.

கடந்த அரசாங்கம் பிற நாட்டவர்களுக்கு விற்ற தேசிய வளங்களை ஆட்சிக்கு வந்த பிறகு மீள பெறுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தேர்தல் காலத்தில் அரசியல் பிரசாரம் செய்தார். ஆனால் தற்போது அரசாங்கம் இந்தியாவுக்கு அடிபணிந்துள்ளது.

தேசிய முதலீட்டாளர்களுக்கு கிழக்கு முனையத்தை வழங்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது. இந்தியாவுக்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் அவசியம். ஆகவே அதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேசிய வளங்களை பாதுகாப்போம் என நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் பொய்யாக்கியுள்ளது. அரசாங்கம் 5 வருட பதவி காலத்துக்குள் கொழும்பு துறைமுகத்தின் இரண்டு பிரதான முனையங்களை இந்தியாவுக்கும், சீனாவுக்கும் வழங்கும் என்பதை உறுதியாக குறிப்பிட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment