நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவுக்கு கொரோனா! - News View

Breaking

Post Top Ad

Sunday, January 24, 2021

நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவுக்கு கொரோனா!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 பேரும் பணியாளர்கள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றில் சகலருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டுமென சபாநாயகர் வலியுறுத்தியிருந்தார். அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாட்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதில் நாடாளுமன்றில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் உள்ளிட்ட ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஐவருக்கு இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தயாப்பா பண்டாரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் பூரண குணமடைந்து சிகிச்சை நிலையத்தில் இருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad