பிரான்ஸில் நிலைமை மோசமாகலாம் - எச்சரித்துள்ள அதிகாரிகள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 26, 2021

பிரான்ஸில் நிலைமை மோசமாகலாம் - எச்சரித்துள்ள அதிகாரிகள்

பிரான்ஸில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லையென்றால், நிலைமை மேலும் மோசமாகலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பிரான்ஸில் எல்லைக் கட்டுப்பாடு வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பாவிலிருந்து பிரான்ஸுக்குச் செல்வோர், தங்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என்பதற்கான பரிசோதனை முடிவைச் சமர்ப்பிக்க வேண்டி வரலாம்.

பிரிட்டனில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை வைரஸ் சுகாதார நிலைமையில் பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

உருமாற்றமடைந்த புதிய வைரஸ், “இன்னொரு நோய்ப் பரவலுக்குச் சமம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

பிரான்ஸில் மூன்று மில்லியனுக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நோய்த் தொற்று அடையாளம் காணப்படுவோர், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர், மரணமடைவோர் எண்ணிக்கை அங்கு தொடர்ந்து உயர்ந்துவருகிறது.

ஊரடங்கிற்கு மத்தியில் பிரான்ஸில் தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு கடந்த ஏழு நாட்களில் சராசரியாக நாளைக்கு 20,000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment