பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு கொரோனா இல்லை - News View

Breaking

Post Top Ad

Monday, January 11, 2021

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு கொரோனா இல்லை

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று மருத்துவ அறிக்கை கிடைத்துள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

“யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவினரால் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் மாதிரிகள் பெறப்பட்டு பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதன் பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை நேற்று இரவு 9.30 மணிக்கு வெளியாகியுள்ளது.

அதில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது” என்றும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

அதனால் கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்றில் அவருடன் நெருக்கமாகப் பழகியவர்களில் ஒருவரான எம்.ஏ. சுமந்திரன் நேற்று சுயதனிமைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad