டொனால்ட் ட்ரம்ப் மீது ஐ.நா சபை குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Saturday, January 2, 2021

டொனால்ட் ட்ரம்ப் மீது ஐ.நா சபை குற்றச்சாட்டு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பிளக்வோட்டர் பாதுகாவல் நிறுவனத்துக்காகச் சேவை வழங்கியோருக்குப் பொது மன்னிப்பு வழங்கியிருப்பது சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

பாக்தாத்தில் போர்க்களங்களில் சேவை வழங்கிய குத்தகையாளர்கள், இராணுவப் படையினர் அல்லாதோர் மீதும் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களில் 14 பேர் உயிரிழந்தனர். அவர்கள் மீது சுமத்தப்பட்ட கொலை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. 

தனியார் பாதுகாவல் சேவை குத்தகையாளர்களாக இருந்தாலும், அவர்கள் புரியும் குற்றங்களுக்கு எதிராகத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜெனீவா உடன்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே மன்னிப்பு வழங்கியது சட்டத்தை மீறும் செயல் என ஐ.நா குறிப்பிட்டது.

No comments:

Post a Comment