தங்களை சுய தனிமைப்படுத்திக் கொண்ட மருதமுனை பிரதேச மக்கள் - News View

Breaking

Post Top Ad

Saturday, January 9, 2021

தங்களை சுய தனிமைப்படுத்திக் கொண்ட மருதமுனை பிரதேச மக்கள்

(சர்ஜுன் லாபீர்)

மருதமுனை கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணியின் இன்றைய வேண்டுகோளுக்கிணங்க மருதமுனை முதல் பெரியநீலாவனை வரை இன்று (9) மாலை 7.00 மணியில் இருந்து மக்கள் தங்களை சுய தனினைப்படுத்திக் கொண்டதை காணக்கூடியதாக உள்ளது.

இப் பிரதேசத்தில் உள்ள சகல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டும், வீதி போக்கு வரத்துகள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டதனை அவதானிக்க முடிந்தது.

இதனூடாக மக்கள் கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணியின் வேண்டுகோளுக்கு முழுமையான ஒத்துழைப்புக்கள் வழங்கி இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad