பலாங்கொடை மற்றும் எம்பிலிப்பிட்டி நகர சபைகளின் தலைவர்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பலாங்கொடை மற்றும் எம்பிலிப்பிட்டிய நகர சபைகளின் தலைவர்களை பதவிகளிலிருந்து விலக்குவதற்கு சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கரி கொப்பேகடுவ நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதனடிப்படையில் அதன் பலாங்கொடை மற்றும் எம்பிலிப்பிட்டிய நகர சபைகளின் அதிகாரங்களை உபதலைவர்களுக்கு வழங்குவதற்கு வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
நகர சபை சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த இருவரையும் பதவி விலக்க, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கரி கொப்பேகடுவ வர்த்தமானி ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment