ஜேர்மனியில் அமுல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு ஜனவரி 31ம் திகதி வரை நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜேர்மனியும் ஒன்று. அங்கு கொரோனா வைரசின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
நேற்று வரை ஜேர்மனியில் 18 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 36 ஆயிரத்து 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக்குவது குறித்து அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது.
அதன்படி ஜேர்மனியில் மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கை அமுல்படுத்த அரசு முடிவு செய்தது. அதன்படி, ஜனவரி 10ம் திகதி வரை ஊரடங்கு அமுலில் உள்ளது.
இந்நிலையில், ஜேர்மனியில் அமுலில் உள்ள முழு ஊரடங்கு ஜனவரி 31ம் திகதி வரை நீட்டிக்கப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த முழு ஊரடங்கை மிகவும் கடுமையாக கடைப்பிடிக்க அரசு முடிவு செய்துள்ளது என ஜேர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment