மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா, மொத்த எண்ணிக்கை 288 ஆக உயர்வு - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 5, 2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா, மொத்த எண்ணிக்கை 288 ஆக உயர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனையில் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் உட்பட 25 பேருக்கு இன்று செவ்வாய்க்கிழமை (05) கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டதை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 288 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மயூரன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 552 பேருக்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மட்டக்களப்பு சுகாதார பிரிவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் மற்றும் தனியார் வங்கியில் கடமையாற்றும் இருவர் உட்பட 3 பேருக்கும், பட்டிப்பளை சுகாதார பிரிவில் 2 பேருக்கும், காத்தான்குடி சுகாதார பிரிவில் 16 பேருக்கும், கோறளைப்பற்று மத்தி சுகாதார பிரிவில் 3 பேரும், ஓட்டமாவடி சுகாதார பிரிவில் ஒருவர் உட்பட 25 பேருக்கும் தொற்றுறுதி கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளதுடன் இவர்களில் 182 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சுகாதார முறைகளை பேணி செயற்படுமாறு அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நிருபர்

No comments:

Post a Comment