103 நதிகள் அபிவிருத்தி செய்யப்படும் என்கிறார் சுற்றாடல்த்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர - News View

Breaking

Post Top Ad

Sunday, January 3, 2021

103 நதிகள் அபிவிருத்தி செய்யப்படும் என்கிறார் சுற்றாடல்த்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர

(இராஜதுரை ஹஷான்)

நதி பாதுகாப்பு செயற்திட்டம் எதிர்வரும் மாதம் 2 ஆம் திகதி முதல் செயற்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் 103 நதிகள் அபிவிருத்தி செய்யப்படும் என சுற்றாடல்த்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையிலுள்ள 103 ஆறுகளையும் உள்ளடக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். 'உலக ஈர நிலங்கள் தினம்' நிகழ்வுடன் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நதி பாதுகாப்பு செயற்திட்டத்துக்கு 200 மில்லியன் ரூபாய் கோரப்பட்டுள்ளது. இந்த முழு தொகையை வழங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுவரை ஆட்சியில் இருந்த எந்தவொரு அரசாங்கமும் ஆறுகளை பாதுகாக்கும் விடயத்தில் கவனம் செலுத்தவில்லை. நதிகளின் விளிம்பு பகுதிகளில் உள்ள சட்ட விரோத கட்டிடங்கள் இந்த செயற்திட்டத்தின் ஊடாக அகற்றப்படும்.

ஆற்றுப்படுகையில் உள்ள மண் வளத்தை பாதுகாக்க பலமான மரங்கள் கரையோரங்களில் வளர்க்கப்படும். சட்ட விரோத மண்ணகழ்வு செயற்பாடுகளை தவிர்க்க 24 மணித்தியால கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad