(செ.தேன்மொழி)
வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள பிரபல போதைப் பொருள் கடத்தல் காரரான 'ரத்மலானே அஞ்சு' எனப்படும் சந்தேகநபரின் உதவியாளர் ஒருவரை ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மொரட்டுவை பகுதியில் நேற்று வியாழக்கிழமை திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து 102 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபரான இளைஞன், வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படும் பிரபல போதைப் பொருள் கடத்தல்காரரான 'ரத்மலானே அஞ்சு' எனப்படும் நபரின் உதவியாளர் என்றும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வு பிரிவினர் சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment