மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிதாக ஐந்து TMVP உறுப்பினர்கள் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 13, 2020

மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிதாக ஐந்து TMVP உறுப்பினர்கள் நியமனம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சுழற்சி முறையில் உறுப்பினர்களை நியமிப்பது என்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிய உறுப்பினர்கள் ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பழைய உறுப்பினர்கள் ஐந்து பேர் விலகிக் கொள்ள, அவர்களுக்குப் பதிலாக, புதிய ஐந்து பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதை அடுத்து வெள்ளிக்கிழமை 11.12.2020 மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம். தயாபரனிடம் புதிய உறுப்பினர்களின் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ஜே. ஜெயராஜ், மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவரான சந்திரகாந்தனின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் அத்துடன் நியமனம் பெற்ற ஐந்து உறுப்பினர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய உறுப்பினர்களில் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் ஆபிரகாம் ஜோர்ஜ்பிள்ளை, மண்முனைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிறிஸ்டினா சாந்தன் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

No comments:

Post a Comment