கிழக்கு மாகாணத்தில் இதுவரை 577 பேருக்கு கொரோனா - சுகாதார சேவைகள் பணிப்பாளர் லதாகரன் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 13, 2020

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 577 பேருக்கு கொரோனா - சுகாதார சேவைகள் பணிப்பாளர் லதாகரன்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 577 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஞாயிற்றுக்கிழமை (13.12.2020) காலை 10 மணி வரை கடந்த 12 மணித்தியலத்தில் 37 பேர் புதிய தொற்றாளர்களாக உறுதிப்படுத்ததையடுத்து மாகாணத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 577 ஆக உயர்வடைந்துள்ளது.

பேலியகொட கொத்தணியில் மட்டக்களப்பில் 97 பேரும் திருகோணமலையில் 18 பேரும் கல்முனையில் 419 பேரும் அம்பாறையில் 20 பேரும் கொரோனா வைரஸ் தொற்றில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இவற்றுக்கு மேலதிகமாக மினுவான்கொட கொத்தணியுடன் தொடர்புடைய 4 பேரும், கந்தக்காடு தொடர்புடைய 5 பேரும், வெலிசறை கடற்படையுடன் தொடர்புடைய 11 பேரும், வெளிநாட்டிலிருந்து வந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாகாணத்தில் ஐந்து சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டு இவர்களுக்கான சிகிச்சையளிக்கப்படுகிறது என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment