மரக்கறி, பழ வகைகளை நியாயமான விலையில் பாவனையாளர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, December 14, 2020

மரக்கறி, பழ வகைகளை நியாயமான விலையில் பாவனையாளர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

மரக்கறி மற்றும் பழ வகையை நியாயமான விலையில் நுகர்வோருக்கு வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் பரீட்சார்த்த நிகழ்ச்சித் திட்டமாக நேரடியாக விவசாயிகளிடமிருந்து பெறப்படும் உற்பத்திகளை நாராஹென்பிட்டி மீகொட மற்றும் வெலிசறை பொருளாதார மத்திய நிலையங்களிலுள்ள வியாபாரிகளுக்கு வழங்க விவசாயத் திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.

இது தொடர்பில் நாராஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலைய வியாபாரிகளுடன் விசேட கலந்துரையாடலொன்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் நேற்று இடம்பெற்றது.

தற்போதைய நிலைமையின் கீழ், நியாயமற்ற வகையில் மரக்கறி மற்றும் பழ வகைகளின் விலை மட்டம் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய பணிப்புரைக்கமைய இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, பதுளை மற்றும் அனுராதபுரம் மாவட்டச் செயலாளர்களையும் விவசாய சங்க உத்தியோகத்தர்களையும் இணைத்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad