புரவி புயல் தாக்கத்தினால் கிண்ணியாவில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார் கிழக்கு மாகாண ஆளுநர் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 3, 2020

புரவி புயல் தாக்கத்தினால் கிண்ணியாவில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார் கிழக்கு மாகாண ஆளுநர்

புரவி புயல் தாக்கத்தினால் கிண்ணியாவில் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று (03) கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பாண்டிகோரள ஆகியோர் பார்வையிட்டனர்.

கிண்ணியா பிரதேச செயலாளர் முகமது கனியின் வேண்டுகோளுக்கிணங்க, இவர்கள் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இடிமன் மற்றும் குறிஞ்சாக்கேணி போன்ற இடங்களில் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களையும் விசாரித்து அறிந்து கொண்டனர்.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இருந்து 680 குடும்பங்கள் 237 இடைத்தங்கல் முகாம்களில் பாதுகாப்புக்காக தஞ்சமடைந்திருந்தனர் என மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். அவர்களுக்கு சமைத்து உணவும் வழங்கப்பட்டன.

1,145 குடும்பங்கள் பாதுகாப்பு தேடி அவர்களது உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்திருந்தனர். இவர்கள் இன்று காலை தங்களுடைய வீடுகளுக்கு திரும்பியிருந்தனர். திருகோணமலை மாவட்டத்தில் 17 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

(கிண்ணியா மத்திய நிருபர் - கியாஸ்)

No comments:

Post a Comment