2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இலங்கை மதுவரி திணைக்களத்திற்கு ஐந்து ஆண்டு காலத்திற்காக கிடைக்கப்பெற வேண்டிய வரி நிலுவை 2376.2 மில்லியன் டொலர்களாகும் என்பது கடந்த 07ஆம் திகதி கூடிய பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் வெளிப்பட்டது.
2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் மதுவரி திணைக்களத்திற்கு ரூ. 479.9 மில்லியன் வரிப்பணம் கிடைக்கப்பெற வேண்டுமென்பதோடு அதற்கான தாமதத்திற்கான நிலுவைக் கட்டணம் 1896.3 மில்லியன் ரூபா ஆகும்.
இவ்வாறு நிலுவையில் உள்ள வரித் தொகையை வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டார்.
இவற்றை வசூலிக்கும் நோக்கில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட அரச அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.
கடந்த 05 ஆண்டுகளில் மதுவரி திணைக்களம் 224,737 சோதனைகளை நடத்தியுள்ளதாகவும், அதில் 2017 ஆம் ஆண்டு மாத்திரம் 53848 சோதனைகளும், 2018 இல் 49,278 சோதனை நடவடிக்கைகளும், 2019 இல் 47,391 சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை பல்வேறு காரணங்களுக்காக மதுவரி திணைக்களத்தினால் இடைநீக்கம் செய்யப்பட்ட 48 அதிகாரிகள் தொடர்பான ஒழுக்காற்று விசாரணைகள் முறையாக முடிக்கப்படவில்லை என்பது தலைவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதோடு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பங்கேற்காமை போன்ற காரணங்களால் சில அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டமையும் இதன்போது அடையாளம் காணப்பட்டது.
குறித்த விடயங்களுக்கான சட்ட நடவடிக்கைகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் மதுவரி திணைக்களத்தின் நடவடிக்கைகள் திறமையாக பேணப்பட வேண்டும் என்றும் குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.
திணைக்களத்தின் பணியை நேரடியாகப் பாதிக்கும் மூத்த மற்றும் மூன்றாம் நிலை பதவிகளின் வெற்றிடங்களை நிரப்பவும், குறித்த விடயங்களில் தற்போதைய முன்னேற்றம் குறித்த அறிக்கையை குழுவிற்கு சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தலைவர் மேலும் வலியுறுத்தினார்.
மேலும், 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாத நிலமையின் அடிப்படையில் 1,597,559 ரூபாய் கொள்முதல் செலவில் பாதுகாப்பு ஸ்டிக்கர் முறைப்படுத்தல் செயன்முறை மதுவரி திணைக்களத்தின் மொத்த வருமானத்தில் 0.28% மட்டுமே என்பதோடு, வெளிநாட்டு மதுபானங்களின் இறக்குமதியின்போது மட்டும் இவ்விடயம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் குழு சிறப்புக் கவனம் செலுத்தியது.
உள்ளூர் மதுபானங்களை தரப்படுத்துவதற்கான ஒரு அத்தியாவசிய வேலைத்திட்டம் அவசியம் என்பது தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது.
நாட்டிற்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தரும் மதுவரி திணைக்களத்தின் சட்ட மற்றும் ஆராய்ச்சி பிரிவு, உருவாக்கட வேண்டுமென இக்குழுவின் யோசனையை அனைவரும் ஏகமானதாக ஏற்றுக் கொண்டதோடு குறித்த நோக்கத்திற்காக சட்ட அதிகாரி உள்ளீர்க்கப்படாமை தொடர்பிலும் இதன்போது குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இக்குழுவிற்கு பேராசிரியர் திஸ்ஸ விதான தலைமை தாங்கினார். இதில் இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, லசந்த அலகியவண்ண, ஷெஹான் சேமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, வைத்தியகலாநிதி உபுல் கலப்பதி, பேராசிரியர் ரஞ்சித் பண்டார மற்றும், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் திரைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆர்ட்டிகல, மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ. போதரகம உள்ளிட்ட உயர் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment