மட்டக்களப்பு மாவட்ட கல்வி அபிவிருத்தி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் தலைமையில் விஷேட கூட்டம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 9, 2020

மட்டக்களப்பு மாவட்ட கல்வி அபிவிருத்தி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் தலைமையில் விஷேட கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட கல்வி அபிவிருத்தி குழுக்கூட்டம் அரசாங்க அதிபர் க.கருணாகரனின் ஏற்பாட்டில் இன்று (9) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக்குழு இனைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்தியிலும் மாவட்டத்தின் கல்வியில் அபிவிருத்தியினை ஏற்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கதினை நடைமுறைப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது.

இதன்போது பின்தங்கிய பாடசாலைகளில் கானப்படுகின்ற குறைபாடுகளை அடையாளம் கண்டு அபிவிருத்தி மேற்கொள்வதற்கு கல்வி அமச்சரின் உதவிகள் பெறவுள்ளதாகவும் குறிப்பாக மின்சார இணைப்பற்ற பாடசாலைகள், ஓலைகொட்டகை பாடசாலைகள், குடி நீர், மலசல கூடங்கள், போக்குவரத்து, வகுப்பறை தளபாடங்கள் அற்ற பாடசாலைகளை அடையாளம் கண்டு உடணடியாக அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.

ஆசிரியர்களின் பற்றாக்குறை தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் அது தொடர்பாக சமப்படுத்தல் இடமாற்றத்தினை செய்வதும் அதிகஸ்ட பிரதேச பாடசாலைகளுக்கு தேவையான ஆசிரியர்களை வழங்கவும் ஆலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment