மஹிந்தவின் தீர்மானம் தோற்றிருந்தால் இரு வேறு நாடுகள் உருவாகியிருக்கும் - நல்லாட்சி பலரது நம்பிக்கையை நாசமாக்கியது : ரோஹித அபேகுணவர்தன - News View

About Us

About Us

Breaking

Thursday, December 3, 2020

மஹிந்தவின் தீர்மானம் தோற்றிருந்தால் இரு வேறு நாடுகள் உருவாகியிருக்கும் - நல்லாட்சி பலரது நம்பிக்கையை நாசமாக்கியது : ரோஹித அபேகுணவர்தன

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

எமது பிரதமர் அன்று ஜனாதிபதியாக ஆட்சி செய்த காலத்தில் தெளிவான தீர்மானம் எடுக்காது, இந்த நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படாதிருந்திருந்தால் இரண்டு கொடிகள் பறக்கும், இரண்டு தேசிய கீதங்கள் இயற்றப்படும், வெவ்வேறு நீதிமன்றங்கள் இயங்குகின்ற இரு வேறு நாடுகளில் வாழ்ந்திருக்க நேர்ந்திருக்கும் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், யுத்தம் முடிவுக்கு வந்ததுடன் நாட்டின் அபிவிருத்தி ஆரம்பித்தது, அதிவேக வீதிகள், அபிவிருத்தியான நகரங்கள், புதிய ஹோட்டல்கள் என அனைத்துமே உருவாகியுள்ளது. கொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்படும் துறைமுக நகரம், தொடர்மாடி குடியிருப்புகள், வீதிகள் என அனைத்தையும் பார்க்க முடிகின்றது. 

தலைமைத்துவம் சரியான தீர்மானம் எடுக்க வேண்டும். அதுவே எதிர்காலத்தை தீர்மானிக்கும். நல்லாட்சி அரசாங்கத்தை நாம் குறைகூற விரும்பவில்லை. ஆனால் அதிக நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்ட அரசாங்கம் பலரது நம்பிக்கையை நாசமாக்கியது. 

நல்லாட்சி கொழும்பிற்கு அபிவிருத்தியை கொண்டுவரும், மாற்றம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைத்துமே நாசமாகியது. நல்லாட்சியில் எதிர்பார்க்கப்பட்ட அனைத்துமே கனவானது. 

நல்லாட்சி அரசாங்கம் இன்று கூறுவதை போல் தமது ஆட்சியில் அபிவிருத்தி இடம்பெற்றது என்றால், வீடுகள் நிர்மாணிக்கப்பட்டதென்றால், நாம் செய்வதற்கு ஒன்றுமே இருந்திருக்காது. மக்களும் நல்லாட்சியை மோசமாக தோற்கடித்திருக்க மாட்டார்கள். நாம் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற ரீதியில் நாம் மக்களுக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment