வள்ளத்தை தேடி சென்றவர் சடலமாக மீட்கப்பட்டார் - News View

About Us

About Us

Breaking

Friday, December 4, 2020

வள்ளத்தை தேடி சென்றவர் சடலமாக மீட்கப்பட்டார்

நந்திக் கடலில் காணாமல் போயிருந்த மீனவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

வங்காள விரிகுடாவில் உருவாகிய புரெவி புயல் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கடுமையான காற்றுடன் கூடிய மழை பொழிந்த நிலையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், மழை மற்றும் காற்று காரணமாக நந்திக் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த வள்ளம் ஒன்று நந்திக்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றுக் காலை குறித்த வள்ளத்தை கரைக்குக் கொண்டுவருவதற்காக தனது சகோதரனுடன் பிறிதொரு வள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வள்ளத்தில் ஏறியபோது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த மீனவரே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கேப்பாப்பிலவு மாதிரிக் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளிள் தந்தையான 26 வயதுடைய ஜெயசீலன் சிலக்சன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மீனவரைத் தேடும் பணியில் கடற்படையினர், இராணுவத்தினர் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

No comments:

Post a Comment