மீள திறக்கப்பட்டது சுற்றுலா விடுதிகள், முகாம்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, December 4, 2020

மீள திறக்கப்பட்டது சுற்றுலா விடுதிகள், முகாம்கள்

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினூடாக பராமரிக்கப்படும் சுற்றுலா விடுதிகள் மற்று முகாம்கள் இன்று (04) முதல் மீள திறக்கப்பட்டுள்ளன.

இந்த மாதத்திற்காக இதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு விடுதிகள் வழங்கப்படும் என அறிக்கையொன்றினூடாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும், கடந்த மாதம் 2ஆம் திகதி தொடக்கம் நேற்று (03) வரையான காலப்பகுதிக்குள் ஏற்கனவே முற்பதிவு செய்தவர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் விடுதிகளை பதிவு செய்துகொள்ள முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சுற்றுலா விடுதிகள் மற்றும் முகாம்களுக்கு செல்வோர் சுகாதார அமைச்சினால் அறிவித்துள்ள கொரோனா ஒழிப்பிற்கான ஒழுங்கு விதிகளை பின்பற்றுதல் அவசியம் என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment