கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெடி பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி இயக்கச்சி பனிக்கையடி எனும் கிராமத்தில் சில வெடி பொருட்கள் நபர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன.
தமக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து, குறித்த வீடு இன்று (3) இராணுவத்தினர் பொலிஸார், புலனாய்வாளர்களால் சுற்றிவளைக்கப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தயானுஜன் அம்பிகா (35 வயது), சிங்கராஜா தயானுஜன் (29 வயது), செல்வநாயகம் ராசமலர் (வயது 67), குலசிங்கம் புவனேஸ்வரி (வயது 62) என்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு பல மணி நேர தேடுதலின் பின்னர் பல வெடி பொருட்களும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் நாளை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மீட்கப்பட்ட வெடி பொருட்கள் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment