ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி அரச தரப்பு பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து வருகிறார் - மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 15, 2020

ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி அரச தரப்பு பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து வருகிறார் - மாலைதீவு வெளிவிவகார அமைச்சர்

(நா.தனுஜா) 

இலங்கை ஜனாதிபதியின் விசேட கோரிக்கைக்கு அமைவாக, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி அரச தரப்பு பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து வருகிறார் என்று மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களுக்கான இறுதிக் கிரியைகளை இலங்கை ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைவாக மாலைதீவில் நடத்துவது குறித்து ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி ஆராய்ந்து வருவதாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷஹீட் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை செய்திருக்கிறார்.

'இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் விசேட கோரிக்கைக்கு அமைவாக, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை மாலைதீவில் நல்லடக்கம் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் அந்நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி அரசதரப்பு பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து வருகிறார்.

'இலங்கைக்கும் மாலைதீவிற்கும் இடையிலான நீண்ட கால இரு தரப்பு உறவுகளை அடிப்படையாகக் கொண்டதாகவும் கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்ட சவாலை எதிர்கொள்வதற்கு உதவும் விதமாகவுமே ஜனாதிபதி சோலியின் தீர்மானம் அமையும். அதுமாத்திரமன்றி தமது அன்பிற்குரியவர்கள் தகனம் செய்யப்படுவதனால் பெரும் கவலையடைந்துள்ள இலங்கை வாழ் முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு இது ஆறுதல் அளிப்பதாகவும் அமையும்' என்று மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கின்றார்.

No comments:

Post a Comment