தெற்காசிய நாடுகளின் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பு விதிகளில் திருத்தம் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 31, 2020

தெற்காசிய நாடுகளின் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பு விதிகளில் திருத்தம் - நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம்

தெற்காசிய நாடுகளின் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (SAFF) யாப்பு விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் அநுர டி சில்வா தெரிவித்தார்.

தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் கூட்டம் சம்மேளனத்தின் தலைவர் காஸி மொஹம்மத் சலாஹுதீன் (பங்களாதேஷ்) தலைமையில் சூம் இணைய வழியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சூம் இணைய வழி கூட்டத்தின்போது சம்மேளன யாப்பு விதிகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதுடன் சாப் காங்கிரஸின் நிலையியல் கட்டளைகள், சாவ் தேர்தல் ஒழுங்குமுறை ஆகிய விடயங்கள் தொடர்பான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

அத்துடன் 2021ஆம் ஆண்டுக்கான சாப் கால்பந்தாட்டப் போட்டி அட்டவணை, நிதி ஒதுக்கீடுகள், 2019 நிதி ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கை ஆகிய விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சூம் இணைய வழியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் அநுர டி சில்வா, செயலாளர் நாயகம் ஜஸ்வர் உமர், எம்.ரமீஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

சாப் கால்பந்தாட்டப் போட்டி பங்களாதேஷில் 2021 செப்டெம்பர் 14ஆம் திகதியிலிருந்து 25ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய போட்டிகள்

சாப் 16 வயதின்கீழ் சிறுமிகள் கால்பந்தாட்டம்: ஆகஸ்ட்
சாவ் 19 வயதின்கீழ் சிறுமிகள் கால்பந்தாட்டம்: ஜூலை
சாவ் 15 வயதின்கீழ் சிறுவர்கள் கால்பந்தாட்டம்: ஒக்.
சாவ் 18 வயதின்கீழ் சிறுறவர்கள் கால்பந்தாட்டம்: ஒக்.

இப் போட்டிகள் நடத்தப்படும் நாடுகள் பின்னர் தீர்மானிக்கப்படும்."

No comments:

Post a Comment