அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் - அறிவித்தார் பிரேசில் ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 9, 2020

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் - அறிவித்தார் பிரேசில் ஜனாதிபதி

பிரேசில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என அந்நாட்டின் ஜனாதிபதி ஜெயிர் போல்சனாரோ அறிவித்துள்ளார்.

கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. அங்கு இதுவரை 66 லட்சத்து 28 ஆயிரத்து 65 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் 1 லட்சத்து 77 ஆயிரத்து 388 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் உரிய ஒப்புதல் கிடைத்தவுடன் பிரேசில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என ஜனாதிபதி ஜெயிர் போல்சனாரோ அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் “அறிவியல் பூர்வமான வழிகாட்டுதல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஒப்புதல் வெளிவந்த பிறகு பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். அதேசமயம் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment