சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ஜனவரி மாதம் விமான நிலையத்தை திறக்க எதிர்பார்ப்பு - இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக - News View

About Us

About Us

Breaking

Sunday, December 13, 2020

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ஜனவரி மாதம் விமான நிலையத்தை திறக்க எதிர்பார்ப்பு - இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக

(இராஜதுரை ஹஷான்) 

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ஜனவரி மாதம் விமான நிலையத்தை சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய திறக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக விமான சேவைகள் மற்றும் வலய ஏற்றுமதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக தெரிவித்தார்.

விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பஸில் ராஜபக்ஷ தலைமையிலான பேச்சுவார்த்தை அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இப்பேச்சுவார்த்தையின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், சுற்றுலா பயணிகளுக்காக நாளாந்தம் நடத்தப்படும் பி.சி.ஆர் பரிசோதனை தொடர்பில் சுகாதார அமைச்சின் தீர்மானம் வெளியிடப்பட்டதையடுத்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். 

தற்போது விமான நிலைய வளாகத்தில் நாளாந்தம் 3000 பி.சி.ஆர் பரிசோதனைகள் எடுக்கப்படுகின்றன. நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து, விமான நிலையம் திறக்கப்படும் சரியான திகதியை விரைவில் அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் ஜனவரி மாதம் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை திறக்க அதிக சாத்தியம் காணப்படுகிறது. சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலில் ஊடாக அதிக அந்நிய செலாவணி கிடைக்கப் பெறுகின்றன. 

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் சுற்றுலாத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. கொவிட்-19 வைரஸ் தாக்கம் தற்போது எதிர்பார்க்கப்பட்ட அளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் முதல் நாடு வழமை நிலைக்கு திரும்பும் இவ்வாறான நிலையில் சுற்றுலாத்துறை சேவையை மீள ஆரம்பிக்க வேண்டும். என்பது கட்டாயமாகும் என்றார்.

இச்சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் விமான சேவை நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment