சிஐடியின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபயசேகர தொடர்ந்தும் அரசியல் பழிவாங்களிற்கு உள்ளாக்கப்படுகின்றமை பக்கச்சார்பின்றி செயற்பட முயல்கின்ற ஏனைய சிஐடியினருக்கு விடுக்கப்படுகின்ற எச்சரிக்கை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவேளை கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஷானி அபயசேகரவிற்கு உரிய கிசிச்சையை அரசாங்கம் வழங்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஷானி அபயசேகர கொரோனாவினால் பாதிக்கப்பட்டவுடன் முதலில் அவரை வெலிக்கடைக்கு கொண்டு சென்றார்கள் பின்னரே அவரை முல்லேரியாவில் உள்ள ஐடிச் கிசிச்சை நிலையத்திற்கு கொண்டு சென்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஷானி அபயசேகரவுடன் கைது செய்யப்பட்ட இரு சிஐடியினருக்கு கொரோனா என தகவல் கிடைத்துள்ளது, ஆனால் அவர்களை அரசாங்கம் இன்னமும் அரச மருத்துவமனையில் கிசிச்சைக்காக அனுமதிக்கவில்லை என மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பிசிஆர் சோதனைகள் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளன, ஆனால் அவர்களிற்கு பனடோலை கொடுத்து விட்டு ஓய்வெடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் குற்றங்கள் குறித்து நேர்மையாக விசாரணைகளை மேற்கொண்ட நேர்மையான பொலிஸாருக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கை இதுவென தெரிவித்துள்ள மனுச நாணயக்கார யார் அதிகாரத்தில் இருந்தாலும் பொலிஸார் பக்கச்சார்பற்ற விதத்திலேயே பணியாற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சில உத்தியோகத்தர்கள் பக்கச்சார்பற்ற விதத்தில் செயற்பட்டதன் காரணமாகவே உலகின் கவனம் இன்று ஷானி அபயசேகரவின் மீது உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
ஷானி அபயசேகர இன்று அரசியல் ரீதியில் பழிவாங்கப்படும் விதம் அரசியல்வாதிகளின் ஊழல்கள் குற்றங்களில் தலையிட வேண்டாம் என நேர்மையான பொலிஸ் அதிகாரிகளிற்கு விடுக்கப்படும் எச்சரிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஷானி அபயசேகர சட்டத்தை அனைவருக்கும் சமமாக பயன்படுத்தினார், அவர் எங்கள் அமைச்சர்களையே விசாரணை செய்தார், அவர் அரசியல் அழுத்தங்களிற்கு அடிபணியவில்லை, எனவும் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment