கொழும்பு தேசிய வைத்தியசாலையில் எதிர்வரும் நாட்களில் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் - சுகாதார அமைச்சு - News View

Breaking

Post Top Ad

Wednesday, December 23, 2020

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் எதிர்வரும் நாட்களில் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் - சுகாதார அமைச்சு

(எம்.மனோசித்ரா)

இலங்கை இதய நோய்கள் தொடர்பான வைத்திய சங்கத்தின் கோரிக்கைக்கமைய ஹேமாஸ் சமூக சேவை அமைப்பினால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பி.சி.ஆர். இயந்திரம் வழங்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் நாட்களில் இங்கும் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை இதய நோய்கள் தொடர்பான வைத்திய சங்கத்தின் கோரிக்கைக்கமைய ஹேமாஸ் சமூக சேவை அமைப்பினால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு 5 மில்லியன் ரூபா பெருமதியான பி.சி.ஆர். இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. 

நேற்று செவ்வாய்கிழமை சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்த இயந்திரம் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இதுவரையில் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படாத நிலையில், தற்போது பரிசோதனைக்கான இயந்திரம் வழங்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் நாட்களில் இங்கும் பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 

இதேவேளை தினமும் சிகிச்சை பெற்று வருகின்ற நோயாளர்களுக்கு பரிசோதனையை துரிதமாக முன்னெடுக்கவும் முடியும். இதற்காக சுகாதார அமைச்சர் ஹேமாஸ் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad