இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கான 'பாக்சிங் டே' டெஸ்ட் நாளை ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Friday, December 25, 2020

இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கான 'பாக்சிங் டே' டெஸ்ட் நாளை ஆரம்பம்

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதுவும் 2ஆவது இன்னிங்சில் வெறும் 36 ஓட்டங்களில் இந்தியா மோசமான சாதனையை பெற்றது.

இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நாளை (26) இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

கடந்த 20 ஆண்டுகளை எடுத்துக் கொண்டால் 'பாக்சிங் டே' டெஸ்டில் அவுஸ்திரேலியா 15 வெற்றியும், 3 தோல்வியும் 2 டிராவும் கண்டுள்ளது.

தற்போது தொடரில் 0-1 என்ற கணக்கில் இந்திய அணி பின்தங்கி இருக்கும் நிலையில் பதிலடி கொடுக்கும் வகையில் எழுச்சி பெறுமா? என்ற எதிர்பார்ப்பை இந்த டெஸ்ட் உருவாக்கி இருக்கிறது.

மேலும் நியூசிலாந்தின் மவுன்ட் மாங்கானு நகரில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

இதேபோல் தென் ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி செஞ்சூரியனில் நாளை ஆரம்பிக்கிறது. 

இவையும் 'பாக்சிங் டே' போட்டி என்றே அழைக்கப்படுகிறது. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பது இன்னொரு சிறப்பு அம்சமாகும்.

No comments:

Post a Comment