கொழும்பில் உள்ள சில அடுக்குமாடி குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்டாலும் நடமாட்டக் கட்டுப்பாடு தொடர்ந்து அமுலாக்கப்படுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மருதானை, மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், ஆட்டுப்பட்டித்தெரு, கடற்கரை வீதி, கொட்டாஞ்சேனை, தெமட்டக்கொட, முகத்துவாரம், கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் முகாத்துவாரம், கிரான்ட்பாஸ், தெமட்டக்கொட முதலான பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த ஆறு வீடமைப்புத் தொகுதிகளில் முடக்க நிலை நீக்கப்பட்டது.
இந்தக் குடியிருப்புத் தொகுதிகளில் வசிப்பவர்கள் குடியிருப்புக்களை விட்டு வெளியேறி கட்டுப்பாடில்லாமல் நடமாடுவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment