கனடா - அமெரிக்கா எல்லைகள் ஜனவரி 21ம் திகதி வரை மூடப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Sunday, December 13, 2020

கனடா - அமெரிக்கா எல்லைகள் ஜனவரி 21ம் திகதி வரை மூடப்பட்டது

கொரோனா வைரஸ் காரணமாக கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான எல்லை ஜனவரி 21ம் திகதி வரை மூடப்பட்டு இருக்கும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் கனடாவும் ஒன்று. அங்கு கொரோனா வைரசின் 2வது அலை தீவிரமாகப் பரவுகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். 

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான எல்லை வருகின்ற ஜனவரி 21ம் திகதி வரை மூடப்பட்டு இருக்கும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “கனடா குடிமக்களை பாதுகாப்பாக வைத்திருக்க கனடா அமெரிக்கா எல்லையில் தற்போது அமுலில் இருக்கும் பூட்டுதல் நடவடிக்கையை இன்னும் 30 நாட்களுக்கு நீட்டித்துள்ளோம்.  அதன்படி ஜனவரி மாதம் 21ம் திகதி வரை கனடா - அமெரிக்கா எல்லை மூடப்படும். இந்த முடிவுக்கு இரு தரப்பு அரசு ஒப்புக் கொண்டுள்ளது” என தெரிவித்துள்ளார். 

முன்னதாக கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் கனடா - அமெரிக்கா இடையே எல்லை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment