ஹட்டன், டிக்கோய நகர சபையின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொற்றுக்குள்ளான அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்செல்வன் கடந்த 17.18.19 ஆம் திகதிகளில் கண்டி, கொட்டகலை மற்றும் தலவாகலையில் இடம்பெற்ற அரசியல் நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்த நிலையில் கடந்த 20 ஆம் திகதி தொற்று உறுதி செய்யப்பட்டு ஹம்பாந்தோட்டை சுயதனிமை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தொற்றாளரான பிரதேச சபை தலைவர் கலந்துகொண்ட அரசியல் கூட்டங்களில் கலந்துகொண்ட ஏனையேரை அடையாளம் கண்டு சுயதனிமைப்படுத்தி அவர்களுக்கு பிசி.ஆர் பரிசோதனை மேற்கொண்டத்தில் இன்று (24) வெளியான அறிக்கையிலே ஹட்டன் டிக்கோயா நகர சபையின் உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான உறுப்பினரை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிகையை ஹட்டன் டிக்கோயா பொதுசுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
மலையக நிருபர் இராமச்சந்திரன்
No comments:
Post a Comment