புது வருட கொண்டாட்டங்களுக்கு இம்முறை அனுமதியில்லை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பொறுமையுடன் சில தினங்களுக்கு இருக்கவும் - பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண - News View

About Us

About Us

Breaking

Monday, December 14, 2020

புது வருட கொண்டாட்டங்களுக்கு இம்முறை அனுமதியில்லை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பொறுமையுடன் சில தினங்களுக்கு இருக்கவும் - பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண

(செ.தேன்மொழி) 

புது வருட கொண்டாட்டங்களுக்கு இம்முறை சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதிமறுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

வைரஸ் பரவல் காரணமாக ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்றுடன் நிட்டம்புவ, புலத்சிங்கள, வத்தளை, பேலியகொட மற்றும் கிரிபத்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் எட்டு கிராம சேவகர் பிரிவுகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் நீண்ட நாட்களாக இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசித்து வருபவர்களை பொறுமையுடன் இன்னும் சில தினங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அதேபோன்று புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்களும் பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவதுடன், சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமையவும் செயற்பட வேண்டும். 

இதேவேளை மீண்டும் வைரஸ் கொத்தணிகள் உருவாகுவதற்கும் இடமளிக்க கூடாது. புதுவருடப் பிறப்பை முன்னிட்டு கடந்த வருடங்களைப் போன்று இம்முறை கொண்டாட்ட நிகழ்வுகள் நடத்த முடியாது. வைரஸ் பரவல் காரணமாக அனைவரும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும்.

தற்போது செயற்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் காரியாலயங்களின் ஊழியர்கள் கை கழுவுதல், முகக் கவசம் அணிதல் போன்ற வழிமுறைகளை முறையாக கடைப்பிடித்து வந்தாலும் மதிய உணவு வேளையில் அனைவரும் முகக் கவசங்களை அகற்றிவிட்டு ஒன்றாக கூடி உணவு உட்கொள்வதாக தெரியவந்துள்ளது. இந்த செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment