மட்டக்கப்பு மாவட்டத்திலுள்ள திணைக்களங்களின் முன்னேற்ற அறிக்கை, அங்குள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வு - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 30, 2020

மட்டக்கப்பு மாவட்டத்திலுள்ள திணைக்களங்களின் முன்னேற்ற அறிக்கை, அங்குள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வு

மட்டக்கப்பு மாவட்டத்தில் குறைபாடுகளுடன் செயற்பட்டு வருகின்ற திணைக்களங்களின் முன்னேற்ற அறிக்கை மற்றும் அத்திணைக்களத்தில் உள்ள குறைபாடு தொடர்பாக நேற்று மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

குறிப்பாக மட்டக்களப்பில் கல்வி, சுகாதாரம், சமூக பொருளாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குறித்த திணைக்களங்களிலே காணப்படுகின்ற பௌதீக மற்றும் ஆளணி பற்றாக்குறை தொடர்பாக தங்களின் வேண்டுகோள்களை முன்வைத்தனர்.

இது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு இப் பௌதீக வளங்களுக்கான நிதியினை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்போது வைத்திய அதிகாரிகள் தாதியர்கள் உதவியாளர்களின் தேவைப்பாடுகள் தற்போதைய நிலைமையில் அவசரமாக தேவைப்படுவதாகவும் அதற்கு மேலதிகமாக கட்டிட வசதிகள் இன்மையால் நோயாளர்களை உரியமுறையில் பராமரிக்க முடியாது உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கருத்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment