ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்க திட்டம் என்கிறார் அமைச்சர் கெஹெலிய - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 8, 2020

ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்க திட்டம் என்கிறார் அமைச்சர் கெஹெலிய

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலையாக மாற்றுவதற்கான செயல்முறை சமுதாயத்தில் ஒரு யதார்த்தமாக மாறாததால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பிரபலமான பாடசாலைகளில் சேர்ப்பதற்கு, நிறைய அழுத்தங்களுக்கு உள்ளாகி வருவதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

திகன - ரஜவெல்ல, பிரதேசத்தில் நிர்மாணிக்கவுள்ள அனைத்து வசதிகளுடன் கூடிய ‘பசுமை மற்றும் ஸ்மார்ட் பாடசாலை’ என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் புதிய தொழில்நுட்ப கல்வி முறைகள் கொண்ட மகளிர்களுக்கான மும்மொழிப் பாடசாலையின் அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இதன் முதல் கட்டத்தின் கீழ் ரூ. 500 மில்லியனை மத்திய மாகாண கல்வி அமைச்சு செலவிட உள்ளது. மேலும் இந்த பாடசாலை திறந்த சூழலில் கல்வி பெற வாய்ப்பளிக்கும் நோக்கில் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் புதிய பாடசாலையாக விளங்கும்.

சுபீட்ஷ நோக்கு கொள்கைத்திட்ட ஜனாதிபதியின் பார்வையில் கல்விக்கு நிறைய இடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுபோன்ற பாடசாலைகளை நிர்மாணிப்பது சர்வதேச மட்டத்தில் வெற்றியளிக்கக் கூடியதாக அமையும்.

நாட்டில் சுமார் 10,156 பாடசாலைகள் உள்ளன, அவற்றில் 370 தேசிய பாடசாலைகள் இருக்கின்றன. தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளோம்.

மேலும் நாட்டில் உள்ள பாடசாலைகளுகளில் 100 ற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை 3000 இருக்கின்றன. மேலும் 50 ற்கும் குறைவான சிறுவர்களைக்கொண்ட பாடசாலைகள் 700 உள்ளன எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

(எம்.ஏ.அமீனுல்லா)

No comments:

Post a Comment