எஸ்.எம்.எம்.முர்ஷித்
ஜனாஷாக்கள் எரிப்பதை எதிர்த்து தேசிய ரீதியாக கபனின் ஒரு பகுதியான வெள்ளைத் துணியூடாக மண்ணறையை மறுப்பவர்களுக்கு அறிவூட்டும் அமைதியான அடையாள எதிர்ப்புப் போராட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.
நாட்டில் அனைத்தின மக்களதும் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், ஓட்டமாவடி பிரதேசத்தில் இன்று (14) திங்கட்கிழமை வெள்ளைத் துணியைக் கட்டும் அமைதியான அடையாள எதிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது, ஓட்டமாவடி பிரதான வீதியிலுள்ள மணிக்கூட்டுக் கோபுர சுற்று வட்டத்தில் பிரதேசத்திலுள்ள அமைப்பினர், அரசியல் பிரமுகர்கள், மூவின மக்களும் கலந்து கொண்டு வெள்ளைத் துணியைக் கட்டி தங்களது எதிர்ப்பினை வெளிக்காட்டினர்.
No comments:
Post a Comment