தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்றையதினம் (28) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
"ஒன்றுபட்டு எமது உறவுகளை சிறை மீட்போம்" எனும் தொனிப்பொருளில், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில், நல்லூர் - நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழ் அரசியல் கைதிகளையும் உடன் விடுவிக்கவேண்டும். நாங்கள் எமது குடும்ப உறவுகளுடன் கூடி வாழ வேண்டும். தொடர்ந்து ஏமாற்றாதே! துரோகம் செய்யாதே. கைதிகளது உறவுகளின் வலியை புரிந்து கொள்ளுக.
சமயத் தலைவர்களே சமுக ஆர்வலர்களே சர்வ கட்சிப் பிரதிநிதிகளே தமிழ் அரசியற் கைதிகளை சிறை மீள குரல் கொடுங்கள் கைதிகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உண்டு.
தசாப்தங்கள் கடந்தும் தடுப்பு சிறை தொடர தமிழர் நாம் செய்த பாவம் என்ன? எம்முடைய உறவுகளை உயிருடன் சாகடிக்க வேண்டாம்.
கொரோனா தாக்கத்திலிருது கைதிகளை பாதுகாக்க வேண்டும். மற்றும் அரசே பாராபட்சம் காட்டாதே என வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறு தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
போராட்டத்தில் நாடாளுமற உறுப்பினர்களான க.வி.விக்னேஸ்வரன், சி.சிறிதரன் மற்றும் த.சித்தார்த்தன், மதத் தலைவர்கள், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சிமன்ற தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment