(செ.தேன்மொழி)
கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளை நீக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும். எனவே அரசாங்கத்திடமிருந்து கல்விக்கான சலுகைகளை வென்றெடுப்பதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணி அதில் மேலும் கூறியிருப்பதாவது, முன்னேற்றமான மனித வளம், தொழில்நுட்பம், கல்வியறிவுடைய நாட்டை உருவாக்குவதாக தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும், அவரது தரப்பினரும் மக்களுக்கு வாக்குறுதிகள் வழங்கியிருந்தனர். அந்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றப் போவதில்லை என்று ராஜபக்ஷர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர்.
கல்வித் துறைக்காக மொத்த தேசிய உற்பத்தியில் ஒரு சதவீதத்தையும் விட குறைவான நிதியை ஒதுக்கீடு செய்யும் நிலைமையில், நாட்டின் எதிர்காலம் குறித்து கல்வி உரிமையை வெற்றி கொள்வதற்காக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
இதேவேளை கல்விக்காக வழங்கப்பட்டுள்ள ஏற்பாடுகளை நீக்குவதை உடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
No comments:
Post a Comment