கிளிநொச்சியில் குளத்தில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலி - News View

About Us

About Us

Breaking

Friday, December 25, 2020

கிளிநொச்சியில் குளத்தில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலி

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்மடு குளத்திற்குள் மூழ்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (25) பிற்பகல் இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நண்பர்கள் அடங்கலாக மூவர் கல்மடு குளத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது குறித்த இளைஞன் குளத்திற்குள் இறங்கிய போதே மூழ்கி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்மடுநகர் சம்புக்குளத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இரத்தினம் லோகிதன் என்பவரே இச்சம்பவத்தில் மரணமடைந்துள்ளார்.

இரண்டு மணிக்கு நீரில் முழ்கி உயிரிழந்துள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment