கொழும்பு மாநகர எல்லையில் 11 ஆயிரத்து 226 தொற்றாளர்கள், 101 மரணங்கள், 58 ஆயிரத்தி 35 பீ,சீ.ஆர். பரிசோதனைகள் என்கிறார் மேயர் ரோசி சேனாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Friday, December 25, 2020

கொழும்பு மாநகர எல்லையில் 11 ஆயிரத்து 226 தொற்றாளர்கள், 101 மரணங்கள், 58 ஆயிரத்தி 35 பீ,சீ.ஆர். பரிசோதனைகள் என்கிறார் மேயர் ரோசி சேனாநாயக்க

(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொழும்பு மாநகர சபை எல்லையில் நேற்று வரை கொரோனா தொற்றாளர்கள் 11 ஆயிரத்து 226 பேர் இனம் காணப்பட்டுள்ளதுடன் 101 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு மாநகர எல்லைப் பிரதேசத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதற்காக எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்மார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொழும்பு மாநகர எல்லையில் நேற்று வரை கொரோனா தொற்றாளர்கள் 11 ஆயிரத்தி 226 பேர் இனம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதேபோன்று 101 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் கொழும்பு மாநகர எல்லைக்குள் 58 ஆயிரத்தி 35 பீ,சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. நேற்று மாத்திரம் 950 பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 150 ரெபிட் என்டிஜன் பரிசோதனை இடம்பெற்றது. 

புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை மூலம் 89 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் ரெபிட் என்டிஜன் பரிசோதனை மூலம் 20 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டிருந்தனர்.

அத்துடன் ஆரம்பத்தை விட ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ற போதும் சில பிரதேசங்களில் இன்னும் அந்த நிலை தொடர்ந்து இருந்து வருகின்றது.

அதனால் பண்டிகை காலத்தில் மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்படுவதன் மூலமும் தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்வதன் மூலமும் இந்த நிலையையை கட்டுப்படுத்திக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment