முகக் கவசங்களை அணிந்து ஒரு நாளாவது ஓய்வு தாருங்கள் - வைத்தியர் ஒருவரின் உருக்கமான வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 22, 2020

முகக் கவசங்களை அணிந்து ஒரு நாளாவது ஓய்வு தாருங்கள் - வைத்தியர் ஒருவரின் உருக்கமான வேண்டுகோள்

முகக் கவசங்களை அணிந்து, உங்களைக் காத்துக் கொள்வதன் மூலம் எங்களுக்கு வாரத்தில் ஒரு நாளாவது ஓய்வு தாருங்கள் என்று பி.சி.ஆர் சோதனைகளில் ஈடுபடும் வைத்தியர் ஒருவர் பொது வெளியில் உருக்கமாக கோரியிருக்கிறார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட பி.சி.ஆர் பரிசோதனைக் கூடத்தில் பணியாற்றும் வைத்தியரான ஆ. முருகானந்தன் தனது விழிப்புணர்வுப் பதிவொன்றின் மூலம் பகிரங்கமாக இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறார்.

அவர் தனது பதிவில் “யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் கொவிட் – 19 பி.சி.ஆர் பரிசோதனைக் கூடம், கடந்த ஒரு மாதத்தினுள் 2 ஆயிரம் சோதனைகளைக் கடந்து விட்டன. உங்கள் முகங்களுக்குக் கவசங்களை அணியுங்கள். ஆகக் குறைந்தது ஞாயிற்றுக்கிழமைகளிலாவது எங்களுக்கு ஓய்வு தாருங்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வைத்தியரும், அவரது மனைவியும் பல்கலைக்கழக மருத்துவ பீட பி.சி.ஆர் ஆய்வு கூடத்தின் ஆரம்ப காலம் முதல் வாரத்தில் ஏழு நாள்களும் ஓய்வின்றிப் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

சுண்டுக்குளி நிருபர்

No comments:

Post a Comment